< Back
தேசிய செய்திகள்
உத்தரப் பிரதேசம்: இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம்: இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
9 Dec 2022 3:19 PM IST

உத்தரப் பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ராம்பூரில் உள்ள இறைச்சி தொழிற்சாலையின் கழிவு மேலாண்மை மையத்தில் தவறுதலாக ஒரு தொழிலாளி விழுந்தார். இந்த நிலையில் அவரைக் காப்பாற்ற முயன்ற போது துரதிர்ஷ்டவசமாக, இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அசாமில் வசிக்கும் பைசுல் அலி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாசில் அலி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மொராதாபாத்தில் உள்ள காஸ்மோஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் சுக்லா கூறும்போது, "சம்பவத்திற்கான காரணம் குறித்து காயமடைந்த தொழிலாளர்களிடம் விசாரிக்க ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை கிடைத்தவுடன் விசாரணையை தொடங்குவோம். இந்த நேரத்தில் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்கள் முன்னுரிமை என்று கூறினார்.

மேலும் செய்திகள்