< Back
தேசிய செய்திகள்
வியாபாரியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

வியாபாரியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
21 Aug 2023 12:15 AM IST

உப்பள்ளியில் வியாபாரியிடம் ரூ.9¼ லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளனர்.

உப்பள்ளி :-

வியாபாரி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கவுடா (வயது56). வியாபாரி. இவர் கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் தனது வியாபாரத்தை ஆன்லைனில் முதலீடு செய்ய ரமேஷ் முடிவு செய்தார்.

அதற்காக இன்ஸ்டாகிராமில் அவர் தேடி வந்தார். இந்தநிலையில் ரமேஷ் எண்ணிற்கு மர்மநபர் தொடர்பு கொண்டு பேசினார்.

அதில், பேசிய நபர் உங்களுக்கு ஐ.இ.எல்.டி.எஸ். (இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லாங்குவேஜ் டீச்சிங் சென்டர்) என்ற சான்றிதழ் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை ரமேஷ் நம்பியுள்ளார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதையடுத்து மர்மநபர் ரமேசிற்கு வங்கி எண்ணை அனுப்பி உள்ளார். ரமேஷ் மர்மநபர் கூறிய வங்கி எண்ணிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.9 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதையடுத்து மர்மநபருக்கு ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆனால் அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை ரமேஷ் உணர்ந்தார். இதுகுறித்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்போில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

எனவே தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்