< Back
தேசிய செய்திகள்
Four wagons of goods train derail in Odisha
தேசிய செய்திகள்

ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

தினத்தந்தி
|
1 Jun 2024 2:02 PM IST

ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பிரிவில் உள்ள காந்தபாஞ்சி ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த போது, அதன் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று இரவு 10.50 மணியளவில் நடைபெற்றது. இதனால் இரண்டு தடங்களிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள், தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு, ராய்ப்பூர்-டிட்லாகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜுனகர் சாலை-ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை கிழக்கு ரெயில்வே இன்று ரத்து செய்தது.

மேலும் விபத்து நடந்த தடங்களில் ரெயில் சேவை மீண்டும் இன்று காலை 7 மணியளவில் தொடங்கப்பட்டது என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்