< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வீட்டிற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
|15 May 2023 1:29 AM IST
உத்தரப்பிரதேசத்தில் வீட்டிற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
பிரயாக்ராஜ்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வீட்டிற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை இரவு ததோலி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ராஜேந்திர குப்தா (35), சரிதா தேவி (32), அர்னவ் (8) மற்றும் லல்லு ராம் (50) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காரின் டிரைவரை போலீசார் கைது செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.