< Back
தேசிய செய்திகள்
ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... குஜராத்தில் சோகம்
தேசிய செய்திகள்

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... குஜராத்தில் சோகம்

தினத்தந்தி
|
7 Jun 2024 12:20 PM IST

ஒருவரை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 3 பேர் சென்ற நிலையில், அவர்களும் ஆழத்தில் சிக்கினர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மகிசாகர் என்ற ஆறு உள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த ஆற்றில் குளிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 3 பேர் சென்ற நிலையில், அவர்களும் ஆழத்தில் மூழ்கினர்.

இதில் 2 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பிரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்