< Back
தேசிய செய்திகள்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 Sept 2022 9:35 PM IST

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தார்,

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள குக்‌ஷி நகரில் உள்ள பழமையான வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கச்சாஹ்ரி சவுக் பகுதியில், தொழிலாளர்கள், அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி திலீப் சிங் பில்வால் கூறும்போது, "மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் பர்வானியில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். உயிரிழந்தவர்கள் கோவிந்த் (32), ரூப் சிங் (35), ராகேஷ் (30) மற்றும் தேர் சிங் (40) என அடையாளம் காணப்பட்டனர் என்று கூறினார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்