< Back
தேசிய செய்திகள்
செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிப்பு: தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து 87 கட்சிகள் நீக்கம்

Image courtacy: PTI

தேசிய செய்திகள்

செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிப்பு: தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து 87 கட்சிகள் நீக்கம்

தினத்தந்தி
|
3 Jun 2022 12:34 AM IST

தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2,796 கட்சிகள் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ளன.

இதில் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன.

எனவே அந்தந்த மாநிலங்களின் தலைைம தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இதில் 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த 87 கட்சிகளையும் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளின் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது.

இந்த கட்சிகள் உடனடியாக மேற்படி விதிமீறல் உள்ளிட்டவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தலில் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்