< Back
தேசிய செய்திகள்
முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங் பா.ஜ.க.வில் இருந்து விலகல்; காங்கிரசில் சேர முடிவு
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங் பா.ஜ.க.வில் இருந்து விலகல்; காங்கிரசில் சேர முடிவு

தினத்தந்தி
|
8 April 2024 9:28 PM IST

அரியானாவின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பிரேம் லதா சிங்கும் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி,

அரியானாவில் பிரபல அரசியல்வாதியாக அறியப்படும் முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங் (வயது 78) பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் நாளை சேர இருக்கிறார். இவருடைய மகன் பிரிஜேந்திர சிங் ஒரு மாதத்திற்கு முன் காங்கிரசில் இணைந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பிரேந்தரின் மனைவி பிரேம் லதா சிங், அரியானாவின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவரும் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய ராஜினாமா பற்றி பிரேந்தர் கூறும்போது, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.

நானும், என்னுடைய மனைவியும் காங்கிரசில் நாளை இணைய உள்ளோம் என தெரிவித்து உள்ளார். 4 தசாப்தங்களாக காங்கிரசில் இருந்து பின்னர், 10 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்த பிரேந்தர், பிரதமர் மோடி தலைமையிலான முதல் அரசில் மத்திய உருக்கு துறை மந்திரியாக பணியாற்றியவர். இதுதவிர்த்து ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்