< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்
|27 Feb 2024 1:11 PM IST
ஷபிகுர் ரஹ்மான் பர்க் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும் , 5 முறை எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சம்பால் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ஷபிகுர் ரஹ்மான் பர்க் ( வயது 93) இன்று காலமானார். இவர் அம்மாநில சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பர்க்கின் உடல்நிலை மோசமடைந்ததால், மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர் உத்தரபிரதேசத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கடந்த 2019ம் ஆண்டு 5வது முறையாக இவர் சம்பால் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்க்கின் மறைவிற்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள்,எம்.பி.க்கள் என பல கட்சிகளை சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.