< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி
|14 March 2024 10:35 AM IST
பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை நாட்டின் 12-வது ஜனாதிபதியாக இருந்துள்ளார்
புனே,
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உடல்நல குறைவால் புனே நகரில் உள்ள பாரதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு காய்ச்சல் மற்றும் நெஞ்சக தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், நேற்றிரவு அவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு வேண்டிய சிகிச்சை அளித்த பின்னர், உடல்நிலை சீரடைந்து உள்ளது. எனினும், தொடர்ந்து அவர் சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளார் என மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், 2007 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் நாட்டின் 12-வது ஜனாதிபதியாக இருந்துள்ளார். நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.