< Back
தேசிய செய்திகள்
முன்னாள் போப் 16-ம் பெனடிக் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

முன்னாள் போப் 16-ம் பெனடிக் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
31 Dec 2022 9:29 PM IST

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக் காலமானார்.

இந்த நிலையில், முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'திருச்சபைக்காகவும் கிறிஸ்து பிரானின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப் எமரிட்டஸ் 16-ம் பெனடிக்ட் மறைவு வருத்தமளிக்கிறது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் துயரப்படும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்