< Back
தேசிய செய்திகள்
மழை பாதித்த இடங்களில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆய்வு
தேசிய செய்திகள்

மழை பாதித்த இடங்களில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆய்வு

தினத்தந்தி
|
10 Aug 2022 8:48 PM IST

சிவமொக்கா டவுனில் மழை பாதித்த இடங்களில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சிவமொக்கா;

சிவமொக்கா டவுன் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழைக்கு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிவமொக்கா டவுன் சேஷாத்திரிபுரம், பாபுஜி நகர் பகுதிகளில் மழைக்கு 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முன்னாள் மந்திரியும், சிவமொக்கா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈசுவரப்பா, அரசு அதிகாரிகளுடன் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மழையால் பாதிப்புக்கு உள்ளான வீடுகளை பார்வையிட்டார்.

பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து அரசிடம் நிவாரணம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்