< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அன்ஷுமன் மொகந்தி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அன்ஷுமன் மொகந்தி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்

தினத்தந்தி
|
17 Feb 2024 11:25 AM IST

அன்ஷுமன் நேற்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸ் சென்று அவரை சந்தித்தார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத் தலைவராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அன்ஷுமன் மொகந்தி, 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அன்ஷுமன் நேற்று அம்மாநிலத்தை ஆளும் பி.ஜே.டி.யில் இணைந்தார்.

இதையடுத்து, பி.ஜே.டி. தலைமையகத்தில் அமைப்புச் செயலாளர் பிரணாப் பிரகாஷ் தாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அன்ஷுமன் ஆதரவாளர்கள் பலர் பி.ஜே.டி.யில் இணைந்தனர். பின்னர் அன்ஷுமன், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸ் சென்று நேற்று அவரை சந்தித்தார்.

மொகந்தி 2014 முதல் 2019 வரை ராஜ்நகர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இருப்பினும், 2019 தேர்தலில் பி.ஜே.டி.யின் துருபா சாஹுவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்