< Back
தேசிய செய்திகள்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

தேவனஹள்ளி:-

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி தனது மனைவி அனிதா, மகன் நிகில், மருமகள், பேரன் மற்றும குடும்பத்தினருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், நகரங்களை சுற்றி பார்த்த குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு பெங்களூருவுக்கு திரும்பினர். பெங்களூருவுக்கு வந்த அன்றே குமாரசாமி, காங்கிரஸ் அரசு மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கான டெண்டரிலும், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திலும் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்களை கூறியதுடன், இதற்கான ஆதாரங்களை பிரதமருக்கு அனுப்பிவேன் என்று அறிவித்தார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் குமாரசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து தனது நண்பர்களுடன் கம்போடியா சென்றுள்ளார். அங்கு 4 நாட்கள் தங்கியிருக்கும் அவர் வருகிற 12-ந்தேதி பெங்களூருவுக்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்