< Back
தேசிய செய்திகள்
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் மரணம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் மரணம்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:36 AM IST

உடல்நலக்குறைவால் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் காலமானார்.

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் மனோகர் சிங் கில் (எம்.எஸ்.கில்). டெல்லியில் வசித்து வந்த இவர் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம்.எஸ்.கில் பஞ்சாப் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.

இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக டி.என்.சேஷன் பதவி வகித்தபோது, தேர்தல் கமிஷனராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னாளில் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

2001-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். பின்னர் 2008-ல் மத்திய விளையாட்டுத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

மறைந்த எம்.எஸ்.கில்லுக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். அவரது உடல் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) தகனம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்