< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை
|1 Aug 2022 5:39 PM IST
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்ட விசாரணையில் மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.