< Back
தேசிய செய்திகள்
எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது - மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஷிண்டே
தேசிய செய்திகள்

எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது - மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஷிண்டே

தினத்தந்தி
|
14 May 2023 5:07 AM IST

எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

ராஜினாமா செய்ய வேண்டும்

சிவசேனா உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு சமீபத்தில் கூறப்பட்டது. தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிவசேனாவின் கொறடாவாக ஏக்நாத்ஷிண்டே அணியின் பாரத் கோகவலேயை சபாநாயகர் அங்கீகரித்தது சட்டவிரோதம் என கூறியுள்ளது. மேலும் உத்தவ் தாக்கரேயை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதையும் கேள்வி எழுப்பி இருந்தது.

இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தார்மீக அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறினார்.

சட்டப்படி அமைந்த அரசு

உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அளித்து ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

எங்கள் அரசு சட்டப்படி, அரசியல் சாசனத்தின்படி தான் அமைக்கப்பட்டது. அதன் மீது தற்போது சுப்ரீம் கோர்ட்டு முத்திரை குத்தி உள்ளது. இதற்கு முன் சிலர் எங்கள் அரசை சட்டவிரோதமானது என கூறி மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்