< Back
தேசிய செய்திகள்
நடிகர் மாஸ்டர் ஆனந்த்தின் மகள் பெயரில் மோசடி: பெண் நிர்வாகி மீது மேலும் 20 பேர் புகார்
தேசிய செய்திகள்

நடிகர் மாஸ்டர் ஆனந்த்தின் மகள் பெயரில் மோசடி: பெண் நிர்வாகி மீது மேலும் 20 பேர் புகார்

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

நடிகர் மாஸ்டர் ஆனந்த்தின் மகள் பெயரில் மோசடி செய்த வழக்கில் பெண் நிர்வாகி மீது மேலும் ௨௦ பேர் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரு:

கன்னட நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான மாஸ்டர் ஆனந்த்தின் மகள் வம்சிக்கா. இந்த சிறுமி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து இருக்கிறாள். இந்த நிலையில் வம்சிக்கா பெயரில், நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தின் நிர்வாகி நிஷா, சிறுமிகளின் பெற்றோர் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார். மாஸ்டர் ஆனந்த்தின் குடும்பத்தை குறிப்பிட்டு, தங்கள் குழந்தைகளையும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்க வைப்பதாகவும் அவர்களிடம் கூறி உள்ளார். அதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் வரை நிஷா பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் எலகங்கா நியூ டவுன் மற்றும் சதாசிவாநகர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் சதாசிவாநகர் போலீசார் நிஷாவை கைது செய்தனர்.

மேலும் அவரை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நிஷாவால் பணத்தை இழந்தவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் நிஷா மீது கோனனகுன்டே உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் நிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்