< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகா: காங்கிரஸ் மூத்த தலைவரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக இருந்த வன விலங்குகளை மீட்ட வனத்துறை
|22 Dec 2022 8:49 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வன விலங்குகளை வனத்துறையினர் மீட்டனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாம்னூர் சிவசங்கரப்பாவின் மகன் எஸ்எஸ் மல்லிகார்ஜுன் கல்லேஷ்வரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வன விலங்குகளை கர்நாடக வனத்துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தாவங்கரேவின் ஆனேகொண்டாவில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு பின்னால் இருக்கும் பண்ணை வீட்டில் 10 புல்வாய் வகை மான்கள், ஏழு புள்ளி மான்கள், ஏழு காட்டுப்பன்றிகள், மூன்று கீரிகள் மற்றும் இரண்டு குள்ளநரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு சில விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய அவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். மேலும் சில விலங்குகள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுகின்றன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.