< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் ஓடும் ரெயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
|22 Dec 2022 4:11 AM IST
வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ஜெர்மனியை சேர்ந்த 25 வயது பெண் பயணி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த 13-ந்தேதி ரெயில் மூலம் அஜ்மீருக்கு சென்றார். அந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக விஷால் சிங் என்பவர் பணியாற்றினார்.
பொதுப்பெட்டியில் பயணம் செய்த அந்த பெண்ணுக்கு ஏ.சி. பெட்டியில் இருக்கை ஒதுக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய விஷால் சிங், அவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.