நாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு
|என்டிபிபி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
கோஹிமா,
நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
60 தொகுகிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் நாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். திமாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.