< Back
தேசிய செய்திகள்
அரசியல் வாழ்வுக்காக தேவேகவுடாவின் காலில் விழுந்தவர் சித்தராமையா; நளின்குமார் கட்டீல் தாக்கு
தேசிய செய்திகள்

அரசியல் வாழ்வுக்காக தேவேகவுடாவின் காலில் விழுந்தவர் சித்தராமையா; நளின்குமார் கட்டீல் தாக்கு

தினத்தந்தி
|
15 Oct 2022 12:30 AM IST

அரசியல் வாழ்வுக்காக தேவேகவுடாவின் காலில் விழுந்தவர் சித்தராமையா என்று மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி;

நளின்குமார் கட்டீல்

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல், தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எடியூரப்பாவை 2 கி.மீ. பாதயாத்திரை செல்லும்படி சவால் விடுத்துள்ளார். பா.ஜனதா ஏராளமான பாதயாத்திரை நடத்தி ஆட்சிக்கு வந்துள்ளது.

எடியூரப்பாவை போல்...

பாதயாத்திரைகளின் எண்ணிக்கையில் எடியூரப்பாவை யாராலும் சமப்படுத்த முடியாது. அவர் மேற்கொண்ட சைக்கிள் பேரணிகளின் எண்ணிக்கை அதிகம்.

அந்த வகையில் எடியூரப்பாவை போல் யாரும் பாதயாத்திரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சிக்கு வர பா.ஜனதாவிடம் இருந்து பாதயாத்திரை பாடத்தை காங்கிரஸ் கற்றுக்கொண்டுள்ளது.

முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பதற்காக சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்களின் காலில் விழுந்து கெஞ்சினார். மேலும் சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில் முத்திரை பதித்து வளர தேவேகவுடாவின் காலிலும் விழுந்தவர் ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்