< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதிக்கும் யூசுப் பதான்
|10 March 2024 2:58 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கொல்கத்தா,
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள 42 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் இடம் பெற்றுள்ளார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.