< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் வெள்ளம்: பெட்ரோல் பங்குகள் மூடல்..!
தேசிய செய்திகள்

டெல்லியில் வெள்ளம்: பெட்ரோல் பங்குகள் மூடல்..!

தினத்தந்தி
|
13 July 2023 3:59 PM IST

டெல்லியில் வெள்ளத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மாநிலம் கனமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இடுப்பு அளவு நீரில் மக்கள் நடந்து செல்கின்றனர். குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் புகுந்த இடங்களில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இதன் காரணமாக மின்சாரம் மற்றும் இணையதள சேவை முடங்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் நிலையங்களில் மழை நீர் புகுந்ததால் அவை மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்