< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் - மீட்புப்பணிகள் தீவிரம்
|10 July 2022 8:36 PM IST
வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தபி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர்மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து, மின்சாரம் அகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருவதாக தபி மாவட்ட கலெக்டர் வத்வானியா தெரிவித்துள்ளார்.