< Back
தேசிய செய்திகள்
ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஐபோன் 14-ஐ வழங்கிய பிளிப்கார்ட்..!!
தேசிய செய்திகள்

ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஐபோன் 14-ஐ வழங்கிய பிளிப்கார்ட்..!!

தினத்தந்தி
|
6 Oct 2022 9:10 PM IST

ஐபோன் 13 போன் ஆர்டர் செய்தவருக்கு பிளிப்கார்ட் ஐபோன் 14-ஐ வழங்கியுள்ளது.

மும்பை,

அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் விலையுர்ந்த செல்போன், லேப்டப் போன்றவற்றை ஆர்டர் செய்த சிலருக்கு, அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்தவருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி ஐபோன் 13-ஐ ஆர்டர் செய்து இருந்தார். இதற்காக அவர் 49 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு வந்த ஆர்டர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டது அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் 14 வகை ஐபோன் 13-ஐ போன்றே இருப்பதாக பலரும் தெரிவித்து வந்த சூழ்நிலையில் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அதே நேரத்தில் ஐபோன் 13க்கும் 14க்கும் இடையே உள்ள வித்தியாசம் பல ஆயிரம் என்பதால் இந்த நபருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்