< Back
தேசிய செய்திகள்
சவுதி அரேபியா சென்ற விமானம் தொழில்நுட்பக்கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம்: விமானி அதிரடி சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

சவுதி அரேபியா சென்ற விமானம் தொழில்நுட்பக்கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம்: விமானி அதிரடி சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
25 Feb 2023 3:59 PM IST

கேரளாவில் கோளாறு காரணமாக சவுதி அரேபியா செல்லும் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில், விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோழிகோடு,

கேரள மாநிலம் கோழிகோடு விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு182 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க முடிவெடுக்கப்பட்டது.

உடனே தரையிறக்கினால் விமானத்தில் தீப்பற்றக்கூடும் என்பதால், 8 முறை வானில் வட்டமடிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால் திருவனந்தபுரம் விமானத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பிற விமானங்கள் புறப்படவோ, இறங்கவோ

இந்த நிலையில், விமானத்தின் எடையை கணிப்பதில் விமானி தவறு செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்