< Back
தேசிய செய்திகள்
கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்..
தேசிய செய்திகள்

கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்..

தினத்தந்தி
|
13 Jan 2023 4:08 PM IST

மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவை கானப்பட்டாலும், சமவெளிப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான பனிப்பொழிவு கானப்படுகிறது.

இந்த நிலையில், தொடர் பனிப்பொழிவு மற்றும் தெளிவில்லாத வானம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று ஸ்ரீநகர் விமான நிலைய இயக்குநர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா, ஏர் ஆசியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் விஸ்தாரா உள்ளிட்ட பெரும்பாலான விமான நிறுவனங்கள் மோசமான வானிலை காரணமாக நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்