< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் இருந்து 14 விமானங்கள் சென்னை, கோவைக்கு திருப்பி விடப்பட்டன
தேசிய செய்திகள்

பெங்களூருவில் இருந்து 14 விமானங்கள் சென்னை, கோவைக்கு திருப்பி விடப்பட்டன

தினத்தந்தி
|
5 April 2023 2:36 AM IST

பெங்களூருவில் இருந்து 14 விமானங்கள் சென்னை, கோவைக்கு திருப்பி விடப்பட்டன.

பெங்களூரு:

பெங்களூரு தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று பெங்களூருவில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4 மணி முதல் 5.51 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசியது. சுமார் 4 முதல் 6 சென்டி மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நேற்று மாலையில் புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் சென்னை, கோவை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மோசமான வானிலை மற்றும் தரையிறங்க சிரமம் ஏற்படும் போன்ற காரணங்களால் விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 12 விமானங்கள் சென்னைக்கும், ஒரு விமானம் கோவைக்கும், ஒரு விமானம் ஐதராபாத்துக்கும் திருப்பி விடப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூருவில் இருந்து 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்