< Back
தேசிய செய்திகள்
ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக குஜராத்தில் தரையிரக்கம்
தேசிய செய்திகள்

ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக குஜராத்தில் தரையிரக்கம்

தினத்தந்தி
|
10 Jan 2023 10:08 PM IST

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

காந்திநகர்,

ரஷியாவில் இருந்து கோவாவிற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. இந்த தகவல் உடனடியாக அந்த விமானத்தின் விமானியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் பயணிகளும், விமான ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் கோவாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

மேலும் செய்திகள்