< Back
தேசிய செய்திகள்
பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் - பறவை மோதியதால் என்ஜின் கோளாறு
தேசிய செய்திகள்

பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் - பறவை மோதியதால் என்ஜின் கோளாறு

தினத்தந்தி
|
19 Jun 2022 11:55 PM IST

பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பாட்னா,

பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-

"பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமான மீது பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. இதனால், விமானம் மீண்டும் பாட்னாவுக்கு தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.

தொழில்நுட்ப கோளாறு பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாரணைக்கு உரியது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்