< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பெண் உரிமையாளர் கைது
|3 March 2024 2:22 PM IST
தானே திலக் நகர் போலீசார், மசாஜ் சென்டருக்குள் சோதனையிட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.
தானே:
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக திலக் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை உரிய சாட்சியங்களுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். அதன்படி கஸ்டமர் போன்று காவலர் ஒருவரை அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்று கண்காணித்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் குழுவினர், மசாஜ் சென்டருக்குள் சோதனை செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர். அவர்களின் வயது 34 முதல் 38 வரை இருக்கும். மசாஜ் சென்டரின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.