< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார்: 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தினத்தந்தி
|
9 Dec 2023 5:24 PM IST

சத்தீஷ்காரில் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படுபவர்களின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு. மேலும், அரசின் முயற்சிகளால் சில மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த 20 நக்சலைட்டுகள் இன்று தங்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகளில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் கொள்கைகளை பரப்புதல், நக்சலைட்டுகள் ஆதரவு போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து சரணடைந்த அனைவருக்கும் மறுவாழ்வு கொள்கை மூலம் திருந்தி வாழ அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்