< Back
தேசிய செய்திகள்
ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 5 பேர் கைது

Image Courtsy: EPA via The Guardian

தேசிய செய்திகள்

ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 5 பேர் கைது

தினத்தந்தி
|
21 April 2023 10:21 PM GMT

ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஜம்முவின் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் நர்வல் பகுதியில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மரை சேர்ந்த ரோங்கியா அகதிகள் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்