< Back
தேசிய செய்திகள்
அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய விசைப்படகு விபத்து - 5 மீனவர்கள் மீட்பு
தேசிய செய்திகள்

அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய விசைப்படகு விபத்து - 5 மீனவர்கள் மீட்பு

தினத்தந்தி
|
2 Feb 2024 10:07 PM IST

விபத்து காரணமாக படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகள் சேதமடைந்தன.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் பகுதியை சேர்ந்த நயனா பி.சுவர்ணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் சுவர்ணா உட்பட 5 மீனவர்கள் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்று கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இதனிடையே அவர்களின் படகு பழுதாகி கடலில் நின்றபோது, பாறையின் அருகே வைக்கப்பட்டிருந்த சர்வே கல்லில் மோதி மூழ்கத் தொடங்கியது.

அப்போது அங்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர், 5 பேரையும் பத்திரமாக மீட்டதோடு, கயிறு கட்டி படகை கரைக்கு இழுக்க முயன்றனர். ஆனால் சிறிது தூரத்தில் கயிறு அறுந்ததால், பின்னர் விரைவு படகு மூலம் பழைய துறைமுகத்திற்கு படகை இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகள் ஆகியவை சேதமடைந்தன. இது தொடர்பாக உல்லால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்