< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பதவியேற்கும் முதல்முறை எம்.எல்.ஏ.- யார் இந்த பஜன்லால் சர்மா?

பஜன்லால் சர்மாவுக்கு இனிப்பு வழங்கிய கட்சி நிர்வாகி

தேசிய செய்திகள்

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பதவியேற்கும் முதல்முறை எம்.எல்.ஏ.- யார் இந்த பஜன்லால் சர்மா?

தினத்தந்தி
|
12 Dec 2023 5:38 PM IST

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சங்கனேர் தொகுதியில் போட்டியிட்ட பஜன்லால் சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்கடித்தார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.

முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-மந்திரி) பஜன்லால் சர்மா (வயது 56) தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற பஜன்லால் சர்மா, கட்சி மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ், ஏபிவிபி ஆகிய அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் சங்கனேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை எதிர்த்து போட்டியிட்டார். பஜன்லால் சர்மா மொத்தம் 145,162 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் 97,081 வாக்குகள் பெற்றார். இதனால் 48081 வாக்குகள் வித்தியாசத்தில் பஜன்லால் சர்மா வெற்றி பெற்றார். இதன்மூலம், முதல் முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கிறார்.

மேலும் செய்திகள்