< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு -2 பேர் காயம்
|19 July 2023 9:10 AM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் ,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் எனும் பகுதி உள்ளது. இங்கு மக்கள் வழக்கம் போல் தங்களது வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் .அப்போது திடீரென சில பயங்கரவாதிகள் அங்கு வந்தனர் .அங்கு இருந்த மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது குண்டு பாய்ந்தது.இதில் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் துப்பாக்கிகச்சூடு நடத்திய நபர்களை தேடுவதற்காக அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.