< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு - பார்கவுன்சில் தலைவர் கண்டனம்
|6 July 2023 6:36 AM IST
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்களை நிறுத்துவது தொடர்பாக வக்கீல்கள் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றவே துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு டெல்லி பார்கவுன்சில் தலைவர் கே.கே.மனன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.