< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இருக்கை வசதி தொடர்பாக வாக்குவாதம்: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு - டெல்லியில் அதிர்ச்சி
|26 Aug 2024 12:36 AM IST
டெல்லியில் கேளிக்கை விடுதியில் கும்பல் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் சத்ய நிகிடன் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இங்கு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாட சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, கேளிக்கை விடுதியில் இருக்கை வசதியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளைஞர்கள் விடுதியின் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் சிலர் தாங்கள் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவத்தால் கேளிக்கை விடுதியில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.