ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு குடோன் வெடித்தது; 4 பேருக்கு தீவிர சிகிச்சை
|ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு குடோன் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனகாபள்ளி,
ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அரிபகா பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட சின்ன யத்த பாலம் பகுதியருகே பட்டாசு குடோன் ஒன்று அமைந்து உள்ளது. இதில், தொழிலாளர்கள் பலர் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 4 பேர் இன்று காலையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளனர். இதில், திடீரென நெருப்பு பறந்து பட்டாசு குடோனில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குடோனில் இருந்த பட்டாசு வெடிமருந்துகள் வெடித்து உள்ளன.
இதில் சிக்கி கொண்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று பாதுகாப்புடன் 4 பேரையும் தீ விபத்தில் இருந்து மெதுவாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதில், சங்கர் ராவ் (வயது 38), கமலம்மா (வயது 38), மகேஷ் மற்றும் பிரசாத் என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த பட்டாசு வெடிவிபத்து பற்றி சபாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.