< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிபத்து
|10 Aug 2023 4:23 AM IST
கொல்கத்தாவில் உள்ள ரபிந்த்ர சதன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள மெட்ரோ ரெயில்நிலையங்களில் ஒன்று ரபிந்த்ர சதன் மெட்ரோ. முக்கிய ரெயில்நிலையங்களில் ஒன்றான இது நேற்று வழக்கம்போல பரபரப்பாக இயங்கி வந்தது.
அப்போது டிக்கெட் கவுண்ட்டர்களின் எதிரே உள்ள 2 தளங்களில் இருந்து கரும்புகை கிளம்பியதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
முதல்கட்ட விசாரணையில், கனரக ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. தீவிபத்தால் சிறிது நேரத்திற்கு ரெயில்நிலைய பகுதி தடை செய்யப்பட்டு தீயணைப்பு பணிகள் நடந்தன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.