< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவில் தலைமைச் செயலகத்தில் தீவிபத்து
|4 Oct 2023 12:39 AM IST
ஒடிசாவில் தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
புவனேஸ்வரம்,
ஒடிசாவின் தலைமைச் செயலகம் 'லோக் சேவா பவன்' எனப்படுகிறது. இங்கு பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் முதல்தளத்தில் கரும்புகை எழுந்ததாக தீயணைப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த வளாகத்திலேயே தீயணைப்பு பிரிவும் இருந்ததால் துரிதமாக வந்த வீரர்கள், கட்டிடத்தின் மற்ற பிரிவுகளுக்கு மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அலுவலக வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
ஏ.சி. எந்திர மின்கசிவே தீவிபத்துக்கான காரணம் என்று தெரியவந்தது.