< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி: முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 2 மூதாட்டிகள் பலி
|1 Jan 2023 10:14 AM IST
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
மருத்துவமனையுடன் இணைந்த முதியோர் இல்லத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த தீ விபத்தில் 82 மற்றும் 92 வயதுடைய இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். 6 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.