< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
|7 Aug 2023 12:28 PM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி பிரிவு அமைந்துள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.