< Back
தேசிய செய்திகள்
குஜராத்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
தேசிய செய்திகள்

குஜராத்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தினத்தந்தி
|
30 July 2023 10:09 AM IST

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சஹிபக் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் 2-வது தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் மேல் தளத்திற்கும் பரவத்தொடங்கியது.

தகவலறிந்து 30 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் மருத்துவமனையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்