< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்
தேசிய செய்திகள்

கேரளாவில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்

தினத்தந்தி
|
23 July 2023 7:35 PM IST

கடைக்குள் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே தலையோலப்பரம்பு பகுதியில் ஜான்சன் புலிவெலி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் நேற்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்குள் கடைக்குள் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்