< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
|19 May 2024 1:14 AM IST
ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவர்னர் மாளிகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புகார் தெரிவித்த அந்த பெண் நேற்று நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் மே 2-ந் தேதி கவர்னர் மாளிகையில் தன்னை வெளியேற விடாமல் 3 அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.