எனக்கு ஒரு காதலியை தேடி பிடித்து கொடுங்கள் - நபர்; போலீசார் அளித்த நகைச்சுவையான பதில்
|நாங்கள் காணாமல் போன காதலியை கண்டுபிடித்து வேண்டுமென்றால் தர முடியும். காதலியை தேடி பிடித்து எல்லாம் தர முடியாது என டெல்லி போலீசார் தெரிவித்து இருந்தனர்.
புதுடெல்லி,
உலக புகையிலை இல்லா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. புகையிலையால் ஏற்படும் தீங்கை விளக்கும் வகையில் டெல்லி போலீசார் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தனர்.
அதில், புகையிலை உங்களை கொல்வது மட்டுமின்றி, உங்களுடைய புன்னகையையும் கொல்கிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனுடன், உலக புகையிலை இல்லா தினம் மற்றும் புகையிலையை வேண்டாம் என கூறுங்கள் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இடம் பெற்றிருந்தன.
எனினும், சிவம் பரத்வாஜ் என்ற சமூக பயனாளர் ஒருவர் இதற்கு தொடர்பில்லாத வகையில் பதிவொன்றை வெளியிட்டார். அதில், அவருக்கு ஒரு காதலியை தேடி பிடித்து தர வேண்டும் என கேட்டு கொண்டார்.
எனினும், சிங்கிள் (தனி நபர்) என பதிவிடுவதற்கு பதிலாக தவறுதலாக சிக்னல் என்று பதிவிட்டு உள்ளார். இதனால், டெல்லி போலீசார் வார்த்தை விளையாட்டில் விளையாடியதுடன், நகைச்சுவையான பதிலையும் அளித்தனர்.
அதில், சார். நாங்கள் காதலியை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு உதவ முடியும் (அவர் காணாமல் போனால் மட்டுமே) என பதிலளித்து இருந்தனர். இதனால், ஒருவரை தேடி பிடித்து எல்லாம் தர முடியாது என்ற வகையில் தெரிவித்து இருந்தனர்.
இதேபோன்று அந்த பதிவில், நீங்கள் சிக்னல் என்றால், நீங்கள் பச்சையாக (கிரீன்) இருங்கள். சிவப்பாக (ரெட்) வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இதில், ஒரு வேளை அவரை தவற விட்டால், காதல் வாழ்வில் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என அடையாளப்படுத்துவதற்காக பச்சை கொடியை டெல்லி போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.