< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது
|17 Dec 2022 11:56 AM IST
48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளியில் பங்கேற்றுள்ளார்.