< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரியில்  விநாடிக்கு  3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
29 Sept 2023 4:06 PM IST

கர்நாடகாவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடியது.

டெல்லி,

டெல்லியில் இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அதிகாரிகள் அணைகளில் 50 டிஎம்சி அளவில் நீர் உள்ளதால் நீர் திறப்பு என்பது சாத்தியமான ஒன்று என கூறினர். மேலும் 12,500 கன அடி நீரை திறக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை கேட்ட கர்நாடக அதிகாரிகள் தமிழகத்திற்கு இதற்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என தொடர்ந்து பிடிவாதமாக கூறினர். இதனால் இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று ஆணையம் வழங்கிய பரிந்துரையின்படியே காவிரியில் 3 ஆயிரம் கன அடி நீரை அக்டோபர் 15 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்